திருக்கழுக்குன்றம் அருகே இரு தரப்பினரிடையே மோதல்; 4 பேர் கைது

திருக்கழுக்குன்றம் அருகே இரு தரப்பினரிடைய ஏற்பட்ட மோதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-04-15 21:45 GMT
கல்பாக்கம்,

திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஒரகடம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 42). இவரது மகன் ஆனஸ்ட்ராஜ் (20). இவர் கடந்த 13-ந் தேதி இரவு அந்த பகுதியில் தனது நண்பர் விஜி (19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜான் பிரேம் (51), அவரது மகன்கள் விஜய் அப்பன்ராஜ் (28), சூரியா (25) மற்றும் அதே பகுதியை சேர்ந்த அல்போன்ஸ் (43) ஆகியோர் ஆனஸ்ட்ராஜ் வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தனர்.

பின்னர் நீ ஏன் இவ்வளவு வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தாய் என கேட்டதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது செல்வகுமார் ஓடி வந்து அவர்களை தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜான் பிரேம், விஜய் அப்பன்ராஜ், சூரியா , அல்போன்ஸ் ஆகியோர் ஆனஸ்ட்ராஜ், மற்றும் விஜியை கத்தியால் குத்தினர். செல்வகுமாரை கையால் தாக்கி உள்ளனர்.

காயம் அடைந்த 3 பேரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் வழக்குப்பதிவு செய்து கத்தியால் குத்திய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார். 

மேலும் செய்திகள்