திருவாரூர் அருகே மரத்தில் லாரி மோதி டிரைவர் உள்பட 2 பேர் காயம்

திருவாரூர் அருகே மரத்தில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2018-04-15 22:45 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் இருந்து செங்கல் ஏற்றி கொண்டு லாரி ஒன்று நாகை மாவட்டம் வாய்மேட்டிற்கு சென்று கொண்டிருந்தது. லாரியை வலங்கைமான் திப்பிராஜபுரத்தை சேர்ந்த பாலசந்திரன் (வயது 37) ஓட்டி சென்றார். லாரியில் செங்கல் ஏற்றும் தொழிலாளி அதே பகுதியை சேர்ந்த யுவராஜ் (19) அமர்ந்து வந்துள்ளார். திருவாரூர் அருகே உள்ள திருநெய்ப்பேர் என்ற இடத்தில் சென்றபோது திடீரென லாரியின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை யோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது லாரி மோதியது. இதில் லாரியின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.

2 பேர் காயம்

இந்த விபத்தில் காயமடைந்த லாரியின் டிரைவர் பாலசந்திரன், தொழிலாளி யுவராஜ் ஆகிய 2 பேரும் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து யுவராஜ் திருவாரூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் டிரைவர் பாலசந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்