சுங்கச்சாவடிகளில் விவசாயிகளிடம் கட்டணம் வசூலிக்க கூடாது, சங்க கூட்டத்தில் தீர்மானம்
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில்விவசாயிகளுக்கு சுங்ககட்டணம் வசூலிக்கக்கூடாது என்று விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிணத்துக்கடவு,
கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கிணத்துக்கடவு வட்டாரத்தலைவர் ரங்கசாமி தலைமைதாங்கினார். நிர்வாகிகள் சண்முகம், செல்வராஜ், வட்டார தலைவர்கள் கணேசன், ரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட தலைவர் பாபு கலந்துகொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில் கடும் வறட்சிநிலவிவருகிறது, இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் வருமானம் இன்றிவிவசாயிகள் அவதிபட்டு வருகின்றனர்.வருமானத்திற்காக தென்னைமரத்தில் கள்ளு கட்டுகிறோம். போலீசார் தோட்டத்திற்குள் அத்துமீறிநுழைந்துகலையத்தை உடைக்ககூடாது. தென்னைமரங்களில் உள்ளபாளையை வெட்டக்கூடாது.இதுகுறித்துவழக்கு போடுங்கள். நாங்கள்கோர்ட்டில் பார்த்து கொள்கிறோம். மக்களுக்கு விளைபொருட்களை உற்பத்திசெய்து தரும்விவசாயிகள் சுங்கச்சாவடிக்கு சென்றால் சுங்ககட்டணம் வசூல் செய்வதில் நியாயம் இல்லை. நாடுமுழுவதும்உள்ள சுங்கச்சாவடி களில்விவசாயிகளுக்கு சுங்ககட்டணம் வசூலிக்கக்கூடாது. இது குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கூறினார்.
கூட்டத்தில் கள் இறக்கும்போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்ற முத்துமாணிக்கம், ஈஸ்வரன், நாகேந்திரன், மாரிமுத்து ஆகியோரை பாராட்டுவது, கள் இறக்கும் களப்போராளிகள் சங்கத்தின் தீர்மானங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும். நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் விவசாயிகளுக்கு (செல்லும் வாகனங்களுக்கு )கட்டணம் வசூலிக்க கூடாது, காவிரிமேலாண்மைவாரியம் அமைக்க அரசைகேட்டுக்கொள்வது, நாட்டுமாடு இனங்களை காப்பாற்ற தோட்டங்கள் தவறாமல் நாட்டுமாடுகள் வளர்க்க வேண்டும்.கிணத்துக்கடவு வட்டாரத்தில் மின்கம்பங்களை ஆய்வு செய்து தரமற்ற மின்கம்பங்களை மாற்ற மின்சாரவாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சுல்தான்பேட்டை வட்டார தலைவர் பஞ்சலிங்கம் மற்றும் ஏராளமானகட்சிசார்பற்ற விவசாயிகள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.