கஜூரகோ: கதை சொல்லும் காதல் சிற்பங்கள்

முதல்முறையாக கஜூரகோ கோவிலை பார்ப்பது ஒரு பரவச அனுபவம்தான்.

Update: 2018-04-15 09:57 GMT
வளைந்து நெளிந்து காடும் மேடும் கடந்து செல்லும்போது பூமியில் இருந்து தீடீரென்று முளைத்து நிற்பதுபோல் தோன்றி, பரவசப்படுத்துகிறது அந்த ஆலயம். அப்போது எல்லோருமே தன்னை மறந்து, ‘ஆகா எவ்வளவு அழகு’ என்று ஆச்சரியக் குரல் எழுப்பிவிடுகிறார்கள்.

மத்தியபிரதேச மாநிலத்தில் இருக்கும் இந்த ஆலயத்தின் கதையே அதிசயமானது. புந்தேல்கண்ட் காட்டில் யாருக்கும் தெரியாமல் மறைந்து கிடந்தது, இந்த அழகு சிற்ப ஆலயம். அதுவும் 700 ஆண்டுகள். 1838-ம் ஆண்டு இங்கிலாந்து என்ஜினீயரான டி.எஸ். பர்ட் என்பவர்தான் மரஞ் செடிகளுக்குள் ஒளிந்துகிடந்த இந்த ஆலயத்தை கண்டுபிடித்து, வெளிப்படுத்தினார். இந்த ஆலய சிற்பங்களில் உயிரோ வியம் போல் நிற்கும் ரதி தேவதைகள் காற்றையும், மழையையும், கடும் வெயி லையும் அத்தனை ஆண்டு களாக தாங்கிக்கொண்டிருந்திருக்கிறார்கள். மனித நட மாட்டமே அந்த பகுதியில் அப்போது இல் லாமலும் இருந்திருக்கிறது.

என்ஜினீயர் பர்ட் உதவியால் ஒளி பெற்று பட்டைத்தீட்டப் பட்டதுபோல் பளிச்சிடும் இந்த ஆலயத்தில் முதலில் இருப்பது லட்சுமண ஆலயம். ஒவ்வொரு ஆலயத்தை பற்றிய விளக்க மும் அவைகளின் அரு கிலே குறிப்பிடப்பட்டிருக் கிறது. அவைகளை பார்வையிடுவ தற்காக சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். கஜூரகோ ஆலயங்கள் என்பவை கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய திசைகளில் இருக்கும் மூன்று ஆலயங்களை உள்ளடக்கியது. ‘இந்திய கலையின் மிகச்சிறந்த வெளிப்பாடு கஜூரகோ சிற்பங்களில் இருக்கிறது’ என்று யூனஸ்கோ குறிப்பிட்டிருக்கிறது. உண்மைதான்! அருகில்.. மிக அருகில்.. தூரத்தில்.. இப்படி எங்கிருந்து பார்த்தாலும் ஆச் சரியம் தருகிறது அந்த சிற்பங்கள்!

கஜூரகோ ஒரு சிற்ப உலகம். அங்கு ஆயிரக்கணக்கான சிற்பங்கள் இருக்கின்றன. மக்களும், அவர்களது சுகபோக வாழ்க்கையும், அன்றாட வாழ்வியல் விஷயங்களும் அங்கு சிற்பங்களாக காட்சி தருகின்றன. யானை, குதிரை, ஒட்டகங்கள், போர்வீரர்களும் சிற்பங்களில் அணிவகுத்து நிற்கிறார்கள். சிற்பிகள் பொதுவாக ஆண்களாக இருப்பதால் அவர்கள் பெண்களைத்தான் வித விதமாக ரசித்து, அனுபவித்து வடித்திருக் கிறார்கள். ரதி தேவதைகள், நாக கன்னிகள், தேவதாசிகள்.. உயிரோட்டமான சிலைகளாக காட்சி தருகிறார்கள்.

கி.பி. 950 முதல் 1050 வரை ஆட்சி செய்த சந்தலா வம்சத்தினர் கஜூரகோவை வடிவமைத்தி ருக்கிறார்கள். அவை புராதன இந்து- ஜைன ஆலயங்களாக குறிப்பிடப்படுகிறது. 12-ம் நூற்றாண்டு வரை இது மங்காத பொலிவுடன் திகழ்ந்திருக்கிறது. அப்போது 20 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில், 85 ஆலயங்கள் இருந்ததாக பழங்கால குறிப்புகள் தெரிவிக்கின்றன. இப்போது ஆலயமும், பரப்பளவும் சுருங்கிவிட்டது. நாகர வாஸ்து சிற்பரீதியில் அவை படைக்கப்பட்டி ருக்கின்றன. பேரீச்சம் பழ மரங்கள் போன்ற கஜீர் என்ற மரங்கள் அந்த பகுதியில் அடர்ந்தி ருந்ததாலத் கஜூரகோ என்று பெயர் பெற்றிருக்கிறது.

கஜூரகோ என்றாலே பாலியல் தொடர்புடைய சிற்பங்கள்தான் பலரது நினைவுக்கும் வருகிறது. ஆண், பெண் உடலுறவு நிலைகளை வெளிப்படுத்தும் காட்சிகளே பலரது மனதிலும் ஓடிவருகிறது. ஆனால் மொத்த சிற்பங்களில் பத்து சதவீதம்தான் அந்த மாதிரியானவை. ஆனால் அவைகளோ அதன் உலகப்புகழுக்கும் காரணமாக இருக்கிறது.

கஜூரகோவில் இருக்கும் காதல் சிற்பங்களை உலகம் பல்வேறு கண்ணோட்டங்களில் பார்க்கிறது. அது மனித வாழ்க்கையில் இருக்கும் அர்த்தம், தர்மம், காமம், மோட்சம் போன்றவைகளை எல்லாம் வெளிப்படுத்துகிறது. புராதனகால இந்தியாவில் செக்ஸ் என்பது பாவமாக அல்ல, புனிதமாக பார்க்கப்பட்டிருக்கிறது. மனித வாழ்க்கையில் முக்கிய அம்சமாக அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதனால் அந்த காலகட்டத்தில் போருக்கும், பிரார்த்தனைக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை காமத்திற்கும் கொடுத்திருக்கிறார்கள். இந்த சிற்பங்கள் படைக்கப்பட்ட காலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் தாந்திரிக் கலையில் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் நம்பிக்கையையும், திறமை யையும் சிற்பங்களில் வெளிப்படுத்தியிருக் கிறார்கள். பாலியல் என்பது அனுபவிக்க வேண்டிய ஒரு கலை. அதனால் அந்த சிற்பங்களை கலைக் கண் ணோட்டத்தோடுதான் பார்க்க வேண்டும் என்பது அங்கே புரியவைக்கப்படும் பாடம்.

நமக்கு அவைகளை விளக்கிச் சொல்லும் சுற்றுலா வழிகாட்டிகளும் ஒரு வகையில் கைதேர்ந்த பாலியல் நிபுணர்கள் போன்றுதான் பேசு கிறார்கள். ‘காமசாஸ் திரத்தின் எல்லா உடலுறவு நிலைகளும் இங்கு உங்கள் கண்களுக்கு முன்னால் விரிந்திருக்கிறது’ என்று விளக்கம் தருகிறார்கள். குடும்பம் குடும்பமாக வருகை தருகிறவர்களும் விளக்கத்தை கேட்டு முகத்தை சுளிப்ப தில்லை. உற்றுப்பார்த்து, காதுகொடுத்து விளக்கத்தை கேட்கவே செய்கிறார்கள். சிலர் மட்டும் தயங்கித் தயங்கி பார்த்துவிட்டு, அர்த்தம் நிறைந்த புன்னகை ஒன்றை சிந்திவிட்டு கடந்து போகி றார்கள். இன்றைய இளந் தம்பதி யினர் திறந்த மனதோடுதான் இருக்கிறா ர்கள். உறவு நிலை சிற்பங்களை பார்த்து உற்சாகமாக தங் களுக்குள் விவாதிக் கிறார்கள். தேவைப்படும் சிற்பங்களை படம் பிடித்துக் கொள்கிறார்கள். அந்த நேரம் பெண் களுக்கு ஒரு வித பரவசத்தையும், தயக்கத்தையும் தருகிறது என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்.

வெளிநாட்டு தம்பதிகள் இந்த காதல் சிற்பங்களை வெகுவாக ஆழ்ந்து ரசிக்கிறார்கள். இந்திய ஆண்களை பற்றியும், பெண்களை பற்றியும், அவர்களது காதல் உணர்வுகளையும், உறவு நிலைகளையும் பற்றி மனந்திறந்து தங்களுக்குள் விவாதிக்கிறார்கள். இந்திய பெண்களின் கட்டுடலும், கவர்ச்சியும் வெளிநாட்டு பெண்களை ரொம்பவே சிலாகித்து பேசவைக்கிறது. சிற்பங்களில் ஆண்களைவிட பெண்களின் உடல் அசாதாரண பலம் பெற்றிருப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

கஜூரகோவில் இருக்கும் ஆலயங்களில் மாதங்கேஸ்வரர் ஆலயத்தில் மட்டும்தான் பூஜைகள் நடக்கின்றன. யூனஸ்கோ வழங்கியிருக்கும் பண உதவியில் இந்திய தொல்லியல் துறை அங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறது. மாலை நேரத்தில் டெம்பிள் கிரவுண்டில் ஒலி- ஒளி காட்சி இடம்பெறுகிறது. கஜூரகோவின் வரலாற்றை அங்கே அழகாக காட்சிப்படுத்துகிறார்கள். அதற்கு பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் குரல் கொடுத்திருக்கிறார். மாலை நேரத்தில் கோவில் கோபுரங்கள் மீது ஒளி படர்வதை காணும்போது இயற்கையே அந்த சிற்பங்களுக்கு தீபமேற்றி சிறப்பு செய்வதுபோல் இருக் கிறது.

காதல் இருப்பவர்கள் கண்டு உணரவேண்டிய சுற்றுலாத்தலம்!

மேலும் செய்திகள்