தானேயில் பெண் உயிரோடு எரிப்பு கணவர், மாமியார் கைது

தானேயில் பெண்ணை உயிரோடு எரித்த அவரது கணவர் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-14 22:33 GMT
தானே,

தானேயில் பெண்ணை உயிரோடு எரித்த அவரது கணவர் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

வாக்குவாதம்

தானே ரகுநாத்நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி தக்சா. இவர்களுக்கு வல்தாஸ் என்ற மகன் இருக்கிறான். கணவர், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென தக்சாவின் அலறல் சத்தம் அக்கம் பக்கத்தினருக்கு கேட்டது. உடனே அவர்கள் அங்கு ஓடி வந்து பார்த்தனர். அப்போது தக்சா உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் வேதனையில் கதறி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

2 பேர் கைது

உடனடியாக போர்வை யால் தீயை அணைத்து அவரை மீட்டு தானே மாநகராட்சி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு 70 சதவீத தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், தக்சா சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த தானே போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் தக்சாவின் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்தது அவரது கணவர் அசோக், மாமியார் ஜம்னாபென் ஆகியோர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

தக்சாவை உயிரோடு கொளுத்தியதற்கான காரணத்தை கண்டறிய இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்