நாமக்கல், ராசிபுரம், மோகனூர் பகுதிகளில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
நாமக்கல், ராசிபுரம், மோகனூர் பகுதிகளில் நேற்று அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது உருவப்படம் மற்றும் சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.;
நாமக்கல்,
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. நாமக்கல்லில் பா.ஜனதாவினர் மணிக்கூண்டு அருகே அம்பேத்கர் உருவப்படத்தை அலங்கரித்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜனதா எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் குப்புசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மனோகரன், மாவட்ட பிரசார பிரிவு தலைவர் மணி, நகர தலைவர் வரதராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தி.மு.க.
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு நகர பொறுப்பாளர் மணிமாறன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும் நேற்று நாமக்கல்லில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் பழ.மணிமாறன் தலைமை தாங்கினார். இதில் நகர செயலாளர் வணங்காமுடி, செய்தி தொடர்பாளர் நீதிநாயகம், தொகுதி செயலாளர் ஆற்றலரசு, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எஸ்.சி., எஸ்.டி. அலுவலர் நலச்சங்கம்
நாமக்கல்லில் தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி. அலுவலர் நலச்சங்கம் சார்பில் நடந்த அம்பேத்கர் பிறந்தநாள் விழாவுக்கு அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயரத்தினகாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயகண்ணன், பொருளாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட துணை தலைவர்கள் விஜயகுமார், பெரியசாமி, பிரசார செயலாளர் மஞ்சுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடந்த விழாவுக்கு மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். இதில் ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் அண்ணாதுரை, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் வேலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராசிபுரம்
ராசிபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் ராசிபுரம் சிவானந்தா சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் நகர அவைத்தலைவர் வி.கே.ஆர்.கே.ராமசாமி, முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர்கள் எஸ்.பி.கந்தசாமி, வெங்கடாசலம், நகர துணை செயலாளர் மனோகரன், பொருளாளர் கோபால், மாவட்ட பிரதிநிதி சண்முகசுந்தரம், முன்னாள் கவுன்சிலர்கள் அருணாசலம், ஸ்ரீதர், பரமேஸ்வரன், முன்னாள் சூப்பர் பட்டு சங்க தலைவர் செல்வம், அம்மா பட்டு சொசைட்டி முன்னாள் துணை தலைவர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
ராசிபுரம் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதன்பிறகு ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் அம்பேத்கர் உருவப்படம் வைத்து மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தி மதவெறி எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி
நிகழ்ச்சிக்கு ராசிபுரம் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் ஆதவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணிமாறன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கல்வி பொருளாதார இயக்கத்தின் மாநில துணை செயலாளர் குமணன், ராசிபுரம் தொகுதி துணை செயலாளர் மாதேஸ்வரன் மற்றும் கட்சியின் பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் விஜயகுமார், சந்திரன், சுகுவளவன், சுரேஷ், பூபதி, தனபால், பென்சமின், விஜய்கார்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்கள். நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் தனவேல் தலைமை தாங்கினார். ராசிபுரம் நகர செயலாளர் கணேசன், நாமகிரிப்பேட்டை ஒன்றிய தலைவர் சண்முகம் மற்றும் இளைஞர் அணி, பேரூர் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மோகனூர்
மோகனூர் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எஸ்.வாழவந்தியில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது. விழாவிற்கு மோகனூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் தங்கஈஸ்வரன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் காமராஜ் கொடியேற்றி வைத்து பேசினார். மாவட்ட பொறுப்பாளர் பூவரசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சரவணன், திருச்செங்கோடு தொகுதி பொறுப்பாளர் சிந்தனைச் செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மோகனூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் மோகனூர் பேரூராட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மோகனூர் பஸ் நிலைய நுழைவு வாயில் அருகே அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செய்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் ரஞ்சித் குமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயலாளர் பிராபகரன் அனைவரையும் வரவேற்றார். இதில் ஒன்றிய, பேருராட்சி பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ரவி நன்றி கூறினார்.