தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

Update: 2018-04-14 22:30 GMT
தூத்துக்குடி,

சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையம் எதிரே உள்ள அவருடைய சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அ.தி.மு.க. மாநில இளைஞர்- இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் என்.சின்னத்துரை தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மாவட்ட துணை செயலாளர் மோகன், மேற்கு பகுதி செயலாளர் முருகன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் யு.எஸ்.சேகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் பெருமாள், முன்னாள் துணை மேயர் சேவியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி., கழக அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வக்கீல் திருப்பாற்கடல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல் தலைமையில் தி.மு.க. இளைஞர் அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

காங்கிரஸ்-த.மா.கா.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சுடலையாண்டி, அலெக்சாண்டர், டேவிட் பிரபாகரன், மண்டல தலைவர்கள் சேகர், தங்கராஜ், மாவட்ட பொருளாளர் பாரகன் அந்தோணிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் பாலன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட த.மா.கா. சார்பில் மாவட்ட துணை தலைவர் அம்பிகாபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் அருண் நேருராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் டேவிட் பெர்னாட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் பெரியாரடியான், மாவட்ட செயலாளர் முனியசாமி, மண்டல தலைவர் பால்ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் ஆழ்வார் மற்றும் பலர் கலந்து கொண்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

ச.ம.க.

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட துணை செயலாளர் முத்துசெல்வம், மாவட்ட பிரதிநிதி முத்துகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் வில்சன் தலைமையில், தெற்கு மாவட்ட செயலாளர் தயாளன், மாவட்ட அவைத்தலைவர் ஜெயகோபால், மாநகர செயலாளர் பிரபாகர், மாவட்ட தொண்டர் அணி செல்வா, மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் ஜெட்லி மற்றும் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பால் அபிஷேகம்

தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 101 பால்குடம் எடுத்து வந்து, அம்பேத்கர் சிலைக்கு அபிஷேகம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி இளைஞர் அணி தலைவர் விமல் தலைமை தாங்கினார். இதில் கோல்டன்புரம் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் தூத்துக்குடி மண்டல செயலாளர் இசக்கிதுரை, தூத்துக்குடி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் மாநில துணை தலைவர் சொக்கலிங்கம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அம்பேத்கர் மக்கள் இயக்கம்

தூத்துக்குடி மாவட்ட அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச்செயலாளர் பத்மநாபன், மாவட்ட தலைவர் நடராஜன், நெல்லை மண்டல தலைவர் இன்னாசி முத்து மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் அர்ச்சுணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து, மாவட்ட குழு உறுப்பினர் சீனிவாசன், பொன்ராஜ், பூமயில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்