ஊசுடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கு கொலை மிரட்டல்
புதுவை ஊசுடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தானுக்கு தனியார் நிறுவன ஊழியர் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.
வில்லியனூர்,
புதுவை மாநிலம் ஊசுடு தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான். இவர் நேற்று அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தனது தொகுதிகளில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மாலையில் அவர், ஊசுடு தொகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவருடன் பாதுகாப்பு பணி போலீஸ்காரர் துத்திப்பட்டை சேர்ந்த ராஜன் என்பவரும் உடனிருந்தார்.
கூடப்பாக்கம் அருகே கார் வந்தபோது சாலையோரம் நின்றுகொண்டிருந்த வாலிபர் ஒருவர் காரை நிறுத்தும்படி சைகை காண்பித்தார். உடனே காரை டிரைவர் நிறுத்தினார். அதையடுத்து போலீஸ்காரர் கீழே இறங்கி அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அந்த வாலிபர் திடீரென அருகே கிடந்த இரும்பு கம்பி ஒன்றை எடுத்து போலீஸ்காரரை தாக்க முயன்றார். உஷாரான போலீஸ்காரர் அந்த வாலிபரின் தாக்குதலில் இருந்து தப்பினார். உடனே அந்த வாலிபர் காரில் இருந்த தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. மற்றும் பாதுகாப்பு போலீஸ்காரர் ராஜன் ஆகியோருக்கு கொலைமிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., பாதுகாப்பு பணி போலீஸ்காரர் ராஜன் ஆகியோர் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து மேற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் உத்தரவின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் ஆகியோர் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த நபர் யார்? என விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர், கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஜெயப்பிரகாஷ் (வயது 27) தனியார் நிறுவன ஊழியர் என்பது தெரியவந்தது. அதையடுத்து தலைமறைவான அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.