காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை போராடுவோம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பேட்டி
காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை போராடுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.;
திருப்பூர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அனைவரும் தீண்டாமையை ஒழிப்போம் எனக்கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதன் பின்னர் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பல நாடுகளில் மன்னராட்சி, அதிபர் ஆட்சி என தனி ஒருவரின் ஆளூமைக்கு கீழ் செயல்படுகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் மக்கள் வாக்களித்து ஒருவரை எம்.எல்.ஏ., எம்.பி.யாக தேர்ந்தெடுத்து உண்மையான ஜனநாயக நாடாக உள்ளது. இதற்கு காரணம் சட்டமேதை அம்பேத்கர், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் அரணாக எஸ்.சி.,எஸ்.டி. சட்டத்தை இயற்றி சமூக பாதுகாப்பை அளித்துள்ளார். தற்போது உச்ச நீதிமன்றத்தில் எஸ்.சி.,எஸ்.டி. பிரிவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த திருத்தங்களால் சமூக நீதி மறுக்கப்படுகிறது. இந்த திருத்தங்களை வாபஸ் பெற வேண்டும் என வலியுத்தி 16-ந்தேதி (நாளை) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அ.தி.மு.க. அரசு சந்தர்ப்பவாத அரசியல் செய்து வருகிறது. தமிழக அரசால் காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் பிரதமரை சந்திக்க நேரம் கூட பெற முடியவில்லை. காவிரி விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையையும் எடுக்காத காரணத்தால், மத்திய அரசின் பிரதிநிதியான கவர்னரிடம் மனு கொடுத்துள்ளோம்.
பா.ஜனதாவை சேர்ந்த எச்.ராஜா தேச விரோதி. தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக பேசி வருகிறார். இவ்வாறு பேசியும் தமிழகத்தில் அவரை சகஜமாக நடமாட விட்டிருக்கும் அளவுக்கு தமிழர்கள் சகிப்புத்தன்மையோடு இருக்கிறார்கள். பிரதமருக்கு கருப்பு கொடி காட்டியதை தவிர்த்திருக்கலாம் என கவர்னர் தெரிவித்தார். ஆனால் கருப்பு கொடி காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானோம் என்பதை தெரிவித்தோம்.
காவிரி விவகாரத்தில் உயர் அதிகாரம் படைத்த காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை போராடுவோம். அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து நாளை நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசித்து அறிவிக்கப்படும். ஐ.பி.எல். போட்டிகளை சென்னையில் நடத்தவே கூடாது என்று கூறவில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழலில் அதனை தள்ளிவைக்க வேண்டும் என்று கூறினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.