குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் தவறு செய்யக்கூடாது நீதிபதி அறிவுரை
குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் தவறு செய்யக்கூடாது என்று சிறைவாசிகளுக்கு மாவட்ட நீதிபதி மகிழேந்தி அறிவுரை வழங்கினார்.
போளூர்,
திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான மகிழேந்தி, போளூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் போளூர் கிளை சிறைச்சாலையில் மரக் கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட நீதிபதி மகிழேந்தி தலைமை தாங்கினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெகன்நாதன், குற்றவியல் நீதித்துறை நடுவர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை சிறை துணை கண்காணிப்பாளர் மோகனம் வரவேற்றார்.
முகாமில் மாவட்ட நீதிபதி மகிழேந்தி பேசியதாவது:-
அனைத்து சிறைச் சாலைகளிலும் சட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. உங்களுக்கான உரிமைகளையும், கடமைகளையும் பற்றி தெரிந்து கொள்ள மாவட்ட சட்டப் பணிகளின் ஆணைக்குழு மூலமாக கிளை சிறைச்சாலைகளுக்கு கணினி வழங்கப்படும்.
வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ள தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை இருதரப்பினரும் சமரசமாக முடித்து கொள்ளலாம். இதனால் நீதிமன்ற கட்டணம் முழுவதும் திரும்ப பெறப்படும். இதில் வெற்றி, தோல்வி என்பது கிடையாது. உங்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் தவறு செய்யக் கூடாது. குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் போளூர் வழக்கறிஞர் சங்க தலைவர் சசிகுமார், சங்க செயலாளர் நாகராஜன், மூத்த வழக்கறிஞர்கள் கணேசன், மதியழகன், நேதாஜி மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்ட சட்டப் பணிகள் குழு நிர்வாக அலுவலர் அண்ணாமலை நன்றி கூறினார்.