கே.ஆர்.எஸ். அணைக்கு நடைபயணம் செல்ல முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 500 பேர் கைது

ஓசூரில் இருந்து கே.ஆர்.எஸ். அணைக்கு நடை பயணம் செல்ல முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன் னாள் எம்.எல்.ஏ.க் கள் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். போலீ சாருடன் வாக்கு வாதம் மற்றும் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Update: 2018-04-14 23:00 GMT
ஓசூர்,

காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு துணை போகும் தமிழக, கர்நாடக அரசுகளை கண்டித் தும் மற்றும் மாநில நதிநீர் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், ஓசூரிலிருந்து கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணை நோக்கி நடைபயணம் மற்றும் ஆர்ப்பாட்டம் நேற்று நடை பெற்றது. முன்னதாக ஓசூர் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாள ரும், தளி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

இதில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவரும், சிவகங்கை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குண சேகரன், தமிழக விவசாயி கள் சங்க மாநில செயலாளர் துரை.மாணிக்கம், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் லகுமய்யா, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பழனி ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து பேசினார்கள். அப் போது, மத்திய மற்றும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர் கள் கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணை நோக்கி நடைபயணம் செல்ல முயன்ற னர். ஆனால், ஓசூர் பஸ் நிலையம் அருகே போலீ சார் அவர்களை தடுத்து நிறுத்தி னார்கள். அப்போது, போலீ சாருக்கும், ஆர்ப்பாட் டத் தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற் றும் தள்ளு முள்ளு ஏற்பட் டது.

இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறும், சாலையை மறித்தவாறும் இருந்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பெண்கள் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும், ஓசூர் ரயில் நிலைய சாலையில் உள்ள ஒரு தனியார் மண் டபத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜய்கார்த்திக் ராஜ், கலால் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்