அரூரை மையமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்
தர்மபுரி மாவட்டம் அரூரை மையமாக கொண்டு புதிய கல்வி மாவட்டத்தை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.
தர்மபுரி,
தமிழக அரசின் உத்தரவுப்படி தர்மபுரி மாவட்டம் அரூரை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் விழாவில் கலந்து கொண்டு புதிய கல்வி மாவட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதற்கான கல்வெட்டையும் திறந்து வைத்தார்.
விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது :-
தர்மபுரி, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், அரூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்கள் கல்வியில் முன்னேறியிருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால் பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்கள் கல்வியில் பின்தங்கி உள்ளன. இந்த பகுதிகளில் அரசு மாதிரிப்பள்ளிகள் தொடங்கப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் ரூ.5 கோடி மதிப்பில் கட்டிடங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனால் வரும் கல்வி ஆண்டில் மேற்கண்ட 3 ஊராட்சி ஒன்றியங்கள் கல்வியில் முன்னேறிய ஒன்றியங்களாக மாறும் நிலை ஏற்படும்.
அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாக்களில் சிட்லிங்,கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, சித்தேரிமலை ஆகிய பகுதிகளில் செயல்படும் அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நிர்வாக பணிகளுக்காக அதிக தொலைவில் உள்ள தர்மபுரிக்கு சென்று வரும் நிலை இருந்தது. இந்த தொலை தூர பயணத்தை தவிர்க்கவும், அந்த பயண நேரத்தை மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அவர்கள் செலவிடவும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது இந்த புதிய கல்வி மாவட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 96 ஊராட்சிகளில் உள்ள 128 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை கொண்டு அரூர் கல்வி மாவட்டத்தை அரசு உருவாக்கியுள்ளது. இதை ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, உதவி கலெக்டர் பத்மாவதி, மாவட்ட கல்வி அலுவலர்கள் வளர்மதி, குழந்தைவேல், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பழனிசாமி, அரசு வக்கீல் பசுபதி, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.