இறந்துபோன தந்தை எங்கே என கேட்ட மகளை விஷம் கொடுத்து கொன்று தாயும் தற்கொலை
இறந்து போன அப்பா எங்கே? என்று கேட்ட மகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டார்.
திரு.வி.க. நகர்,
சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம். காலனி 24-வது தெருவை சேர்ந்தவர் அனிதா (வயது 30). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது கணவர் அருண்குமார் கடந்த பிப்ரவரி மாதம் உடல்நல குறைவால் உயிர் இழந்தார். இதையடுத்து அனிதா மற்றும் அவரது மகள் பாவனா (5) மட்டும் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
பாவனா தொடர்ந்து அப்பா எங்கே? என கேட்டு வந்துள்ளார். இதுபற்றி அனிதா அருகில் வசிக்கும் தனது அக்காவிடம் சொல்லி அழுது வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குழந்தை பாவனா, தாயிடம் தந்தை எங்கே? என கேட்டு அழுததாக தெரிகிறது. பின்னர் இருவரும் வீட்டில் தூங்க சென்றனர்.
நேற்று காலை 9 மணி வரை அனிதா வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது அக்காவின் கணவர் ரமேஷ் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டின் கதவு லேசாக சாத்தியபடி இருந்தது. உள்ளே சென்றுபார்த்தபோது, கட்டிலில் அனிதாவும், பாவனாவும் வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தனர்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ் பெரவள்ளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிட்டிபாபுவுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தந்தை எங்கே? என குழந்தை தொடர்ந்து கேட்டு வந்ததால், மனம் உடைந்த அனிதா தனது மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் குடித்து தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.