திருவள்ளூர் அருகே என்ஜினீயர் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு

திருவள்ளூர் அருகே என்ஜினீயர் வீட்டில் 40 பவுன் நகை திருடப்பட்டது.

Update: 2018-04-14 21:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்தவர் வினோத்(வயது 31). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிசைனிங் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். வினோத் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். மனைவி உடன் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை வினோத்தின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து வினோத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் மனைவியுடன் வீட்டுக்கு வந்து பார்த்தார்.

அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் தங்கநகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் மர்மநபர்களால் திருடப்பட்டிருந்தது. இது குறித்து வினோத் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்