பிறந்தநாளையொட்டி அம்பேத்கர் உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு கரூரில் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;
கரூர்,
அம்பேத்கர் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கரூர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் அம்பேத்கர் உருவப் படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கட்சியின் மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க.வினர் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் அவை தலைவர் காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் சிவசாமி, நகர செயலாளர் நெடுஞ்செழியன், முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், முன்னாள் நகராட்சி தலைவர் செல்வராஜ், அண்ணா தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் பொரணி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட தி.மு.க. சார்பில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கரூர் பஸ் நிலையம் அருகே மனோகரா கார்னர், தாந்தோன்றிமலை உள்ளிட்ட இடங்களில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு சமத்துவ மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய குடியரசு கட்சி, அம்பேத்கர் இயக்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரவக்குறிச்சியில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கல்வி பொருளாதார இயக்க மாவட்ட அமைப்பாளர் ரவிநாத் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட பொருளாளர் சதீஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி செயலாளர் ரிபாய்தீன் கலந்து கொண்டு அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
லாலாப்பேட்டையை அடுத்த மத்திப்பட்டியில் ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கிருஷ்ணராயபுரத்தில் நடைபெற்ற விழாவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிருஷ்ணராயபுரம் பேரூர் செயலாளர் தமிழ் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் சக்திவேல் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் கோவக்குளம், பழையஜெயங்கொண்டசோழபுரம் ஆகிய இடங்களிலும் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
உப்பிடமங்கலம் தெற்குகேட் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் அக்னி இல.அகரமுத்து, மாவட்ட செய்தி தொடர்பாளர் அறிவழகன் ஆகியோர் முன்னிலையில் தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் இரா.பிரபு அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து புலியூரிலும் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.