தாராவியில் இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் சாவு
தாராவியில் இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
மும்பை,
தாராவியில் இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
தொழிலாளி
மும்பை தாராவி சந்த்கக்கையா மார்க் பகுதியில் கட்டண கழிவறை ஒன்று உள்ளது. இந்த கழிவறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தவர் மல்கான் ராஜ்குமார் (வயது25). இவர் நேற்றுமுன்தினம் இரவு கழிவறையின் மேலே உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணிக்காக மின்சார பல்பை அந்த தொட்டிக்குள் தொங்க விட்டபடி உள்ளே இறங்கி இருக்கிறார்.
அப்போது மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்த அவர் தொட்டிக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வாலிபர் சாவு
இதேபோல் தாராவி குட்டிவாடி பகுதியை சேர்ந்தவர் முல்தான் அன்சாரி (18). இவர் நேற்றுமுன்தினம் அதிகாலை 5 மணியளவில் தண்ணீர் பிடிப்பதற்காக அங்குள்ள மோட்டாரை போட்டு உள்ளார். அப்போது, திடீரென மின்சாரம் தாக்கி பலியானார்.
மேற்படி இரண்டு சம்பவங்களிலும் பலியான வாலிபர்களின் உடல்களை தாராவி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.