பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு எதிராக உத்தரவிட ஐகோர்ட்டு மறுப்பு
பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு எதிராக உத்தரவிட மும்பை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து உள்ளது.
மும்பை,
பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு எதிராக உத்தரவிட மும்பை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து உள்ளது.
பிளாஸ்டிக்கிற்கு தடை
மராட்டியத்தில் தினமும் 1,200 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குகின்றன. இந்த கழிவுகளால் சுற்றுச்சூழல் அதிகளவு மாசடைகிறது. இந்தநிலையில் மாநில அரசு கடந்த மாதம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி மராட்டியத்தில் பிளாஸ்டிக் பை, பொருட்கள் மற்றும் தெர்மோகோல் போன்றவை தயாரிக்கவும், விற்பனை செய்யும், பயன்படுத்தவும் முடியாது. இந்த உத்தரவை எதிர்த்து பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவில் மாநில அரசின் உத்தரவு சட்டவிரோதமானது எனவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.
தடை விதிக்க மறுப்பு
இந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் அபய் ஒஹா, ரியாஸ் சக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மாநில அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்ததற்கு போதிய காரணங்கள் இருப்பதாக தெரிவித்தனர். எனவே பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த மாநில அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.