அம்பேத்கர் நினைவு மண்டப பணி 2020-ம் ஆண்டில் நிறைவுபெறும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தகவல்

அம்பேத்கர் நினைவு மண்டப பணி 2020-ம் ஆண்டில் நிறைவு பெறும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

Update: 2018-04-13 23:00 GMT
மும்பை, 

அம்பேத்கர் நினைவு மண்டப பணி 2020-ம் ஆண்டில் நிறைவு பெறும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

அம்பேத்கர் மண்டபம்

மும்பை சைத்யபூமி அருகே இந்து மில் வளாகத்தில் டாக்டர் அம்பேத்கருக்கு மாநில அரசு சார்பில் பிரமாண்ட நினைவு மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டது. சுமார் 12½ ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த மண்டபத்தில், 350 அடி உயர அம்பேத்கர் சிலை மற்றும் நூலகம், ராய்காட்டில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க சவ்தார் குளத்தின் மாதிரி வடிவமைப்பு ஆகியவை இடம்பெற உள்ளன.

கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.

2020-ம் ஆண்டில் பணி நிறைவு

இந்தநிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று அம்பேத்கர் நினைவு மண்டபத்தின் செயல் திட்டத்தை பார்வையிட் டார்.

பின்னர் இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், அம்பேத்கர் நினைவு மண்டப பணிகளை விரைந்து முடிக்க கடினமாக உழைத்து வருவதாகவும், சர்வதேச தரத்துடன் அமையவுள்ள இந்த மண்டபம் வருகிற 2020-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி இறுதி வடிவம் பெறும் எனவும் கூறினார்.

மேலும் செய்திகள்