கர்நாடக அரசு பூங்காவை முற்றுகையிட முயற்சி, த.மா.கா.வை சேர்ந்த 34 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கர்நாடக அரசு பூங்காவை முற்றுகையிட முயன்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 34 பேரை போலீசார் கைது செய்தனர்.;
ஊட்டி,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பில் ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் உள்ள கர்நாடக மாநில அரசுக்கு சொந்தமான கர்நாடகா ஸ்ரீ தோட்டக்கலை பூங்காவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் நேற்று பூங்காவின் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் நுழைவுவாயில் பூட்டப்பட்டு உள்ளே யாரும் நுழையாமல் இருக்க கயிறு கட்டப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் த.மா.கா. மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா தலைமையில் கட்சியினர், காவிரி நீரை மீட்டெடுப்போம் என்று குறிப்பிடப்பட்ட கருப்பு பனியன் அணிந்தபடியும், கொடிகளை ஏந்தியபடியும் கர்நாடகா ஸ்ரீ தோட்டக்கலை பூங்காவை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். உடனே அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
இதில் கலந்து கொண்ட மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, துணைத்தலைவர் அருணேஸ்வர், மாநில பொதுச்செயலாளர் சரத், நீலகிரி மாவட்ட தலைவர் விஸ்வநாதன் உள்பட 34 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். போராட்டத்தையொட்டி கர்நாடகா தோட்டக்கலை பூங்கா நேற்று முழுவதும் மூடப்பட்டு இருந்தது. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் பூங்காவை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
முன்னதாக த.மா.கா. மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை பா.ஜனதா அரசு மதிக்காமல், கர்நாடகா மாநில தேர்தல் நடைபெற இருப்பதை மனதில் வைத்து தமிழகத்திற்கு பெரிய அநீதி இழைத்திருக்கிறது. தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்காததால் 19 விவசாய மாவட்டங்கள் பாலைவனமாகும் அபாயம் உள்ளது. 21 மாவட்டங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. மத்திய அரசு தமிழகத்தின் உரிமைகளை பறித்து வருகிறது.
அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரும் ஊட்டியில் உள்ள கர்நாடக மாநிலத்துக்கு சொந்தமான தோட்டக்கலை பூங்காவை தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும். இந்த பூங்காவிற்கு தமிழக அரசு பூங்கா என்று பெயரிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை இந்த பூங்காவை திறக்கக்கூடாது. கர்நாடகாவில் வாட்டாள் நாகராஜ், தமிழக மக்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். மத்திய அரசு அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மேட்டூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படுகிறது. மத்திய அரசு மக்களுக்கு தெரியாத வகையில் சுங்க கட்டண நுழைவு வரியை 20 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதனால் பொருட்களுக்கு விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது. இதுவரை இல்லாத அளவில் பெட்ரோல், டீசல் விலை மிக அதிக விலைக்கு உயர்ந்திருக்கிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அ.தி.மு.க. அரசு, காவிரி பிரச்சினை உள்பட தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் கேட்காமல் இழந்து வருகிறது. கர்நாடகாவில் காங்கிரசும், பா.ஜனதாவும் இணைந்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.