‘கம்பரசர்’ வெடித்து வாலிபர் பலி, தந்தை படுகாயம்

‘கம்பரசர்’ வெடித்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவருடைய தந்தை படுகாயமடைந்தார்.

Update: 2018-04-13 22:15 GMT
விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்தவர் ஷேக் மொய்தீன்(வயது 60). இவர் அதே பகுதியில் பஞ்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இவரது மகன் தாஜ்தீன்(30), கடைக்கு வந்தார். அப்போது கடையில் இயங்கி கொண்டிருந்த கம்பரசர்(காற்று பிடிக்கும் எந்திரம்) திடீரென வெடித்து சிதறியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த தாஜ்தீன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஷேக்மொய்தீன் படுகாயமடைந்தார். இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து படுகாயமடைந்த ஷேக் மொய்தீனை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான தாஜ்தீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்