அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் 4-வது நாளாக போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், பொது சேவை அமைப்பினர், கல்லூரி மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவ-மாணவிகள் கடந்த 10-ந்தேதி முதல் தொடர்ந்து வகுப்புகளை புறக்கணித்து தர்ணா, மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், நேற்று 4-வது நாளாக மாணவர்களின் போராட்டம் நீடித்தது. கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் நேற்று காலை 10 மணிக்கு வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோவில் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலை யை மூட கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பியபடி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாலை 4 மணி வரை நீடித்தது. இதையடுத்து மாலை 4 மணியளவில் மாணவர்கள் அனைவரும் தர்ணா போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.