காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், ஓய்வுபெற்ற காவல்துறையினர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற காவல்துறையினர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிை-றேவற்றப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவல்துறையினர் மற்றும் சீருடை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் பழனிவேலு, பொருளாளர் ஞானமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் தலைவர் சேகர் வரவேற்றார். மாநில துணை செயலாளர் இன்பசேகரன், ஓய்வுபெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார், ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் நாதமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும், இதற்காக விவசாயிகள், தமிழக அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கு சட்டரீதியாக உதவி செய்வது, அனைத்து மருத்துவமனைகளிலும் அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அனைத்து நோய்களுக்கும் பணமில்லா சிகிச்சை அளிக்க வேண்டும்,
விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் செயற்குழு உறுப்பினர்கள் சாரங்கன், சுந்தரமூர்த்தி, தெய்வசிகாமணி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.