வசிப்பிடமாக மாறிய ரெயில் பயணம்
ஜெர்மனியில் வசிக்கிறார் 23 வயது லியோனி முல்லர். ஒரு வாடகை வீட்டில் தங்கி, பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
வீட்டின் உரிமையாளர் மூலம் அளவுக்கு அதிகமான பிரச்சினைகள் வந்து கொண்டே இருந்திருக்கிறது. ஒருகட்டத்தில் கடுப்பாகிப்போன முல்லர், வாடகை வீட்டைக் காலி செய்துவிட்டார். பழைய வீட்டில் கிடைத்த மோசமான அனுபவத்தால் இன்னொரு வாடகை வீட்டுக்கு செல்ல அவருக்கு தயக்கமாக இருந்திருக்கிறது. அதனால் ஓடும் ரெயிலை வாடகை வீடாக மாற்றிக் கொண்டார்.
25 ஆயிரம் ரூபாய்க்கு சீசன் ரெயில் டிக்கெட்டுகளை வாங்கியதோடு, ரெயில்களிலேயே தங்கி வாழ ஆரம்பித்துவிட்டார். ஜெர்மனி ரெயில்களில் சகல வசதியும் இருக்கும் என்பதால் முல்லருக்கு வசதியாகி போய்விட்டது. குளிப்பது, துவைப்பது, மடிக் கணினியில் வேலை செய்வது என்று அத்தனை வேலைகளையும் ரெயிலிலேயே செய்து விடுகிறார். பல்கலைக்கழகம் செல்வது, காதலரை சந்திப்பது என தேவையானபோது மட்டும் ரெயிலை விட்டு இறங்கிக் கொள்கிறார். ரெயில் நிலையத்தில் கிடைக்கும் உணவுகளைச் சாப்பிட்டுக் கொள்கிறார்.
‘‘30 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்தாலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஆனால் 25 ஆயிரம் ரூபாய் ரெயில் கட்டணத்தில் நிம்மதியாக வசிக்கிறேன். தூங்குவது ஒன்று மட்டுமே கொஞ்சம் சிரமமானது. மற்றபடி ரெயில் என்னுடைய வீடாகவே மாறிவிட்டது. படிப்பு முடித்தவுடன் காதலர் வீட்டில் சொல்லி, திருமணம் செய்துகொண்டால் தங்கும் பிரச்சினையும் இருக்காது’’ என்கிறார் லியோனி.
# சீசன் டிக்கெட்டை வாடகை வீடாகவே மாத்திட்டீங்களே!