சிந்திக்க வைக்கும் பிறந்த நாள் பரிசு

நெதர்லாந்தின் ராட்டர்டேம் பகுதியில் ‘ஸ்ஹி’ ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகளையும், குப்பைகளையும் மக்கள் கொட்டி வந்தார்கள்.

Update: 2018-04-13 11:57 GMT
 37 வயது டாம்மி க்ளெய்ன் தனி ஒருவராக இந்த ஆற்றைச் சுத்தம் செய்யும் பணியில் இறங்கினார். தினமும் அரை மணிநேரம் ஆற்றங்கரைக்குச் சென்று, குப்பைகளை ஒரு பையில் சேகரிக்க ஆரம்பித்தார். 5 வாரங்களில் 100 மீட்டர் தூரத்தைச் சுத்தம் செய்து முடித்துவிட்டார். தான் சுத்தம் செய்யும் விஷயத்தையும், புகைப்படங்களையும் பேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டார்.

அதைப் பார்த்துவிட்டு நிறைய பேர் ஆற்றை சுத்தம் செய்ய முன் வந்தனர். இப்பொழுது ஆற்றங்கரையோரம் சுத்தமாகவும் அழகாகவும் காட்சியளிக்கிறது. ‘‘கர்ப்பமாக இருக்கும் என் மனைவி, ஒருநாள் ‘ஆறு ஏன் அசுத்தமாக இருக்கிறது என்று குழந்தை கேட்கப் போகிறது. உன் அப்பாதான் சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டார் என்று நான் சொல்வேன்’ என்றார். விளையாட்டுக்கு அவர் சொன்னாலும் என் குழந்தை பிறக்கும்போது இந்த ஆறு சுத்தமானதாக மாறவேண்டும் என்று முடிவெடுத்தேன். அதையே பிறந்தநாள் பரிசாகவும் கொடுக்க நினைத்தேன். நல்லவேளையாக அதை செயல்படுத்தியும் விட்டேன்’’   என்கிறார் க்ளெய்ன். இவரது புகைப்படங்களும், கட்டுரையும் நெதர்லாந்தில் மட்டுமில்லாமல் மற்ற நாடுகளிலும்  தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

# நல்ல ஐடியாதான். ஆனால் நம்ம  ஊருல தான் ஆற்றங்கரையே இல்லையே. அப்புறம் எப்படி சுத்தப்படுத்து வது..?

மேலும் செய்திகள்