பொம்மைக்கு சவாரி

ஸ்காட்லாந்தில் ஆடுகளுக்கு இடையே ஓட்டப் பந்தயம் நடத்தப்படுகிறது. இதற்காக ஆடுகளுக்கு ஆடை அணிவிக்கப்படுகிறது.

Update: 2018-04-13 11:55 GMT
ஆடுகளின் மேல் கம்பளியால் உருவாக்கப்பட்ட வண்ண பொம்மைகள் கட்டப்பட்டிருப்பதால்,  ஆடுகளின் மீது பொம்மைகள் சவாரி செய்வது போலக் காட்சியளிக்கின்றன. நூறாண்டுகளைக் கடந்த கம்பளி தொழிற்சாலையும், ஆட்டுப் பண்ணைகளும் இணைந்து இந்த ஓட்டப் பந்தயத்தை நடத்துகின்றன. கடந்த 4 ஆண்டுகளாக நடைபெறும் போட்டியில் ஆயிரக்கணக்கான ஆடுகள் பங்கேற்று வருகின்றன. ஆடுகள் நிற்காமல் ஓடுவதற்காக, அவற்றின் பின்னே ஒரு சிறுவன் குச்சியுடன் ஓடு   கிறான். பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தப் போட்டியைப் பார்ப்பதற்காக, பல கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நிற்கிறார்கள். ஆரவாரம் செய்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் இந்தப் போட்டிக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது.

மேலும் செய்திகள்