அசிங்கத்திற்கு, ஒரு அழகுப் போட்டி..!
‘அசிங்கமே அழகு’ என்ற பொருளில் இங்கிலாந்தில் ஆண்டுதோறும் ஒரு போட்டி நடத்தப்படுகிறது.
‘அசிங்கமே அழகு’ என்ற பொருளில் இங்கிலாந்தில் ஆண்டுதோறும் ஒரு போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் அளவுக்கு அதிகமான எடையை இழுக்க வேண்டும். அப்படி இழுக்கும்போது அவர்களின் முகம் வலியால் எவ்வளவு அசிங்கமாக மாறுகிறது என்பதை வைத்துதான் வெற்றி கணிக்கப்படுகிறது. பலநூறு ஆண்டுகளாக இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.
ஏராளமான ஆண்களும் பெண்களும் இந்தப் போட்டியில் பங்கேற்க ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் இதுவரை 16 முறை சாம்பியன் பட்டங்களை வென்ற டாம்மி மாட்டின்சன் தோல்வியைச் சந்தித்தார். கார்டன் பிளாக்லாக் என்பவர்தான் சாம்பியன் பட்டம் வென்றார். க்ளார் ஸ்பெடிங் என்ற பெண் இரண்டாவது முறையாகப் பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஒப்பனை செய்யக்கூடாது, செயற்கைப் பற்களை வைத்திருக்கக்கூடாது போன்ற விதிகள் இந்தப் போட்டிக்கு உள்ளன.