பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தி.மு.க.-கூட்டணி கட்சியினர் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி ஆர்ப்பாட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் வீடுகளிலும், கடைகளிலும் கருப்புக்கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உருவப்படத்தை எரித்த 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி,
பிரதமர் நரேந்திரமோடி நேற்று சென்னைக்கு வந்தார். அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் கருப்புக்கொடி காட்டுவது, வீடுகள், கடைகளில் கருப்புக்கொடி கட்டுவது என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள், கடைகள், தெருக்களில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தேனி, கம்பம், போடி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சின்னமனூர் உள்பட பல்வேறு இடங்களில் கருப்புக்கொடி கட்டப்பட்டு இருந்தது.
தேனியில் சுப்பன்தெரு, வி.எம்.சாவடி, அல்லிநகரம், பெரியகுளம் சாலை, பழனிசெட்டிபட்டி உள்பட பல்வேறு இடங்களில் தி.மு.க. சார்பிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் சார்பிலும் கருப்புக்கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் தங்களின் வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புக்கொடிகள் கட்டி இருந்தனர்.
தேனி-பெரியகுளம் சாலையில் வைக்கப்பட்டு இருந்த வேகத்தடுப்புகளிலும், மின்கம்பங்களிலும் கருப்புக்கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. அவற்றை போலீசார் அகற்றினர்.
மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தேனி வி.எம்.சாவடியில் தி.மு.க.வினரும், அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், தேனி பழைய பஸ் நிலையத்திலும் அல்லிநகரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல், போடி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது
மக்கள் அதிகாரம் அமைப்பின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தலைமையில் அந்த அமைப்பினர், கம்பம் பஸ்நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர், தபால்நிலையத்துக்குள் நுழைந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தபால் நிலையத்தில் இருந்து வெளியேற்றி கதவை அடைத்தனர். இதற்கிடையே அவர்கள், பிரதமர் மோடியின் உருவ படத்தை தீயிட்டு எரித்தனர். இதைத்தொடர்ந்து 27 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிரதமர் மோடியின் தமிழக வருகையை கண்டித்து கம்பம் சிக்னல், பழைய பஸ்நிலையம், சுங்கத்தெரு, புதுபள்ளி வாசல் தெரு, கம்பம்மெட்டுச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்கயில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது. மேலும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கருப்புச்சட்டை அணிந்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.