சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 15 ஆண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 15 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி மும்பை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

Update: 2018-04-12 22:15 GMT
மும்பை, 

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 15 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி மும்பை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

3 சிறுமிகள் மானபங்கம்

மும்பை சாந்தாகுருஸ் குடிசை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது40). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பக்கத்து வீட்டை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

இந்தநிலையில் மேலும் 2 சிறுமிகளிடம் அவர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தோசை கைது செய்தனர்.

15 ஆண்டு ஜெயில்

இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையில், சந்தோஷ் தனியாக இருக்கும் போது தனது வீட்டிற்கு சிறுமிகளை அழைத்து வந்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி ரேகா, 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காக சந்தோசுக்கு 15 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்