கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பஸ்கள் மீது நடவடிக்கை இல்லை ஊழியர் சங்கம் புகார்
அரசு உத்தரவுக்கு மாறாக கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அரசு ஊழியர் சங்கம் புகார் கூறியுள்ளது. அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
விருதுநகர்,
தமிழக அரசின் உத்தரவுக்கு மாறாக விருதுநகர் மாவட்டத்தில் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று புகார் செய்தது தொடர்பாக கடந்த மாதம் 2-ந்தேதி விருதுநகர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களில் உள்ள 3 வட்டார போக்குவரத்து அலுவலர்களும் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையின் கூட்ட குறிப்பு எங்கள் சங்கத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் சிட்டி எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். பஸ்களை இயக்க வட்டார போக்குவரத்து அலுவலகம் எவ்வித அனுமதியும் வழங்கவில்லை என்றும், இந்த பஸ்கள் 2 நாட்கள் நிறுத்தப்பட்டுவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அரசு உத்தரவுப்படி மாவட்டத்தில் இயக்கப்படும் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் வசூலிக்க ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
பேச்சு வார்த்தை முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் அதிகாரிகள் ஒத்துக்கொண்டபடி எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு உத்தரவுக்கு மாறாக 24 பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டது என போக்குவரத்து துணை ஆணையர் ஒத்துக்கொண்ட போதிலும் அந்த பஸ்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு எங்கள் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
முன்னதாக அரசு உத்தரவை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் போக்குரவத்து கழக மற்றும் தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விருதுநகர் வட்டார போக்குவரத்து கழகம் முன்பு அரசு ஊழியர் சங்கம், அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, அனைத்து துறை அரசு ஓய்வூதியர் சங்கம் ஆகிய சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.