மூதாட்டியை ஆசிட் ஊற்றி கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

சென்னை கோடம்பாக்கத்தில் மூதாட்டியை ஆசிட் ஊற்றி கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2018-04-12 22:45 GMT
சென்னை,

சென்னை கோடம்பாக்கம் வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் ஜமுனாராணி(வயது 50). இவர், அதே பகுதியில் உள்ள கிருஷ்ணவேணி(70) என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார். அவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 2016–ம் ஆண்டு பூ வியாபாரம் செய்து கொண்டிருந்த கிருஷ்ணவேணி மீது ஜமுனாராணி ஆசிட் ஊற்றினார். இதில், பலத்த காயம் அடைந்த கிருஷ்ணவேணி இறந்து போனார்.

இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜமுனாராணியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, குற்றம்சாட்டப்பட்ட ஜமுனாராணிக்கு ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்