காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினர் சாலை மறியல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பாபநாசத்தில், ஜனநாயக மாதர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மோடியின் உருவ படத்தையும் எரித்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக மாதர் சங்கத்தினர் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாபநாசம்,
தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாபநாசம் தெற்கு வீதி மெயின்ரோட்டில் அமர்ந்து ஒப்பாரி வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு பாபநாசம் ஒன்றிய செயலாளர் விஜயாள் தலைமை தாங்கினார். போராட்டத்தில் தஞ்சை மாவட்ட செயலாளர் தமிழ்செல்வி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில் பாபநாசம் மாதர் சங்க ஒன்றிய தலைவர் மாலதி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பவானி, தேவி, மோகனா, கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டன. அப்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பிரதமர் மோடியின் உருவப்படத்தை தீவைத்து எரித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடாந்து சாலை மறியலில் ஈடுபட்ட ஜனநாயக மாதர் சங்கத்தினர் 15 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால் தஞ்சாவூர்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.