தண்டவாளத்தில் குண்டு வைத்த மர்ம நபர்கள் யார்? தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
பொள்ளாச்சி அருகே தண்டவாளத்தில் குண்டு வைத்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
பொள்ளாச்சி,
மதுரையில் இருந்து பொள்ளாச்சி வழியாக கோவைக்கு பயணிகள் ரெயில் நேற்று முன்தினம் காலை 7.45 மணிக்கு புறப்பட்டது. பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் ரெயில்வே கேட் அருகில் ரெயில் வந்து கொண்டிருந்த போது ரெயிலின் 4-வது இணைப்பு பெட்டியின் கீழ்பகுதியில் குண்டு வெடித்தது.
இதில் ரெயிலுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. இதையடுத்து ரெயில் அங்கிருந்து புறப்பட்டு கோவைக்கு வந்தது. சம்பவ இடத்துக்கு போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். தற்போது காவிரி பிரச்சினை நடைபெற்று வருவதால் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக குண்டு வைத்து ரெயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை பழனி ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு மன்னர் மன்னன் சம்பவ நடந்த பகுதிக்கு வந்து ஆய்வு செய்தார். மேலும் நடந்த சம்பவங்கள் குறித்து போலீசாரிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர் தண்டவாளத்தின் இருபுறமும் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு போலீசார் நடந்து சென்று தடயங்கள் ஏதாவது கிடைக்கிறதா? என்று பார்த்தனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.
பின்னர் மாலையில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பாரி, பொள்ளாச்சி துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மீண்டும் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பழனி ரெயில்வே போலீசார் பொள்ளாச்சியில் முகாமிட்டு தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்த மர்ம நபர்களை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது.
ரெயில்வே தண்டவாளத்தில் குண்டு வெடித்த இடம் மதுரை ரெயில்வே கோட்ட பகுதியில் வருகிறது. இதனால் பழனி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் தண்டவாளத்தில் குண்டு வைத்த நபர்கள் குறித்து பொள்ளாச்சி துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 7 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் ஒரு தனிப்படை குழுவினர் தண்டவாளத்தில் சேகரிக்கப்பட்ட வெடிகுண்டுகளின் மாதிரிகளை ஆய்வுக்கு சென்னைக்கு எடுத்துச்சென்று உள்ளனர். அந்த வெடி மருந்துகளின் தன்மையை அறிந்து கொள்வதற்கு மற்றொரு தனிப்படையினர் சிவகாசிக்கு விரைந்துள்ளனர்.இதற்கிடையில் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி சங்கத்தில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் பதிவாகி இருந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினோம். ஆனால் அவருக்கு இதில் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளில் பொருத்தப்பட்டு இருந்த கேமராக்களின் பதிவுகளில் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் இருந்துள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு நடந்து வருகிறது.
தண்டவாளத்தில் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் குண்டு வைத்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் காலையில் அந்த வழியாகத்தான் திருச்செந்தூர் பயணிகள் ரெயிலும், அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயிலும் சென்றுள்ளன. எனவே அதன் பின்னர்தான் தண்டவாளத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது.
இந்த இடைபட்ட நேரத்தில் சந்தேகப்படும்படியான நபர்கள் அந்த பகுதியில் சுற்றி திரிந்தார்களா? என்று தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பெரிய அளவில் விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோணத்தில், தண்டவாளத்தில் குண்டுகள் வைக்கப்படவில்லை. அச்சுறுத்தல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான், சிறிய அளவிலான குண்டு வைக்கப்பட்டு உள்ளது. இதுபோன்று வேறு பகுதியில் சம்பவங்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.