மத்திய அரசை கண்டித்து தி.மு.க., தோழமை கட்சியினர் வீடுகள்- கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
மத்திய அரசை கண்டித்து பெரம்பலூரில் தி.மு.க. மற்றும் தோழமை கட்சியினர் வீடுகள் மற்றும் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், ராணுவ தளவாட கண்காட்சியை திறந்து வைக்க சென்னைக்கு வருகை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் தங்களது வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏற்றி வைக்குமாறு தி.மு.க. தலைமை அழைப்பு விடுத்திருந்தது. அதன்பேரில் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தின் மாடியில் தி.மு.க. கொடிக்கு அருகில் கருப்பு கொடியும், முகப்பு வாசலில் கிரில் கதவில் கருப்பு கொடியும் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தோழமை கட்சிகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் தங்கள் வீடுகளின் முன்பு நேற்று கருப்பு கொடி ஏற்றி வைத்திருந்தனர்.
புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், காமராஜர் வளைவு, ஆத்தூர் சாலை, துறையூர் சாலை, தலைமை தபால் நிலையம் அருகில், சங்கு பேட்டை, கடைவீதி, மதனகோபாலபுரம், வெங்கடேசபுரம், துறைமங்கலம், நான்குரோடு, வடக்கு மாதவி சாலை, எளம்பலூர் சாலை உள்பட பெரம்பலூர் நகரத்தில் உள்ள 21 வார்டுகளிலும் பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் சிலர், கடைகள் மற்றும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிவைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் ஒரு சில விவசாயிகள் தங்களது ஆடைகளில் கருப்பு பட்டை அணிந்து கொண்டு, குழந்தைகளின் ஆடைகளிலும் கருப்பு பட்டை அணிந்து கொள்ள செய்திருந்தனர். கடை வியாபாரிகள் சிலர் கருப்பு சட்டை அணிந்து கொண்டும், கடைகளில் கருப்பு கொடியை தானிய மூட்டையில் சொருகி வைத்தும், வியாபாரத்தை தொடர்ந்தனர்.
இதேபோல் பெரம்பலூர் ஒன்றிய பகுதியில் மேலப்புலியூர், எசனை, குரும்பலூர் பேரூராட்சி, ஆலத்தூர் ஒன்றியத்தில் கூடலூர், கொளக்காநத்தம்,பாடாலூர், செட்டிக்குளம், நக்கசேலம், வேப்பூர் ஒன்றியத்தில் குன்னம், மருவத்தூர், அகரம்சீகூர், வேப்பூர், லெப்பைக்குடிக்காடு, வேப்பந்தட்டை ஒன்றியத்தில் வேப்பந்தட்டை, வி.களத்தூர், கிருஷ்ணாபுரம், அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சி பகுதிகளில் வீடுகள், வணிக நிறுவனங்கள் சிலவற்றில் கருப்பு கொடி ஏற்றி வைக்கப்பட்டிருந்தது.