விபசார சோதனையில் 2 பெண்கள் பலி போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது பரிதாபம்

போலீசுக்கு பயந்து மதுபான பார் மாடியில் இருந்து கயிறு கட்டி இறங்க முயன்ற 2 விபசார பெண்கள் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-04-11 22:03 GMT
மும்பை, 

போலீசுக்கு பயந்து மதுபான பார் மாடியில் இருந்து கயிறு கட்டி இறங்க முயன்ற 2 விபசார பெண்கள் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தனர்.

போலீஸ் சோதனை

மும்பை கிராண்ட் ரோடு பகுதியில் உள்ள ஒரு மதுபான பாரில் விபசாரம் நடந்து வருவதாக டி.பி.மார்க் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணியளவில் போலீசார் அங்கு சென்றனர். பாரின் கீழ் தளத்தில் போலீசார் சோதனை நடத்துவதை அறிந்த விபசார பெண்கள் மேல்மாடிகளுக்கு பதறியடித்து கொண்டு ஓடினர்.

போலீசாரின் பிடியில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக பாரின் 3-வது மாடியின் ஜன்னல் வழியாக 2 விபசார பெண்கள் கயிறு கட்டி கீழே இறங்க முயன்றனர்.

கீழே விழுந்து சாவு

அவ்வாறு மாடியில் இருந்து இறங்கியபோது 2 பெண்களும் தவறி கீழே விழுந்தனர். அந்த இரு பெண்களும் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் துடித்தனர். இதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் 2 பேரையும் மீட்டு ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்

போலீசுக்கு பயந்து தப்பிக்க நினைத்து உயிரிழந்த 2 விபசார பெண்களும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. அவர்களில் ஒருவருக்கு 30 வயதும், மற்றொருவருக்கு 50 வயதும் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்