மத்திய அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் எண்ணம் இல்லை - முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.;
காரைக்கால்,
காரைக்கால் மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கு 5 புதிய போலீஸ் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை போலீஸ் நிலையங்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி காரைக்கால் பஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன், எம்.எல்.ஏக்கள் கீதா ஆனந்தன், அசனா, மாவட்ட கலெக்டர் கேசவன், போலீஸ் டி.ஐ.ஜி. சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு போலீஸ் நிலையங்களுக்கு வாகனங்களை வழங்கி, அவற்றை தொடங்கிவைத்தார். பின்னர் நிருபர்களுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காரைக்கால் மாவட்ட காவல் துறைக்கு முதல்கட்டமாக 5 வாகனங்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளது. 2-ம் கட்டமாக இன்னும் ஒரு சில மாதங்களில் 5 வாகனங்கள் வழங்கப்படும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுச்சேரியில் அண்மையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில், என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்திற்கு எதிராக பா.ஜ.க. இருப்பதுபோல், என்.ஆர். காங்கிரசும் உள்ளது. இதன்மூலம் என்.ஆர்.காங்கிஸ் கட்சியின் மக்கள் விரோத கொள்கையை மக்கள் புரிந்துகொண்டனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. அமைக்கும் எண்ணமும் மத்திய அரசுக்கு இல்லை. இந்த அலட்சியப்போக்கை கண்டித்து இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கு மேலும் காலக்கெடு வழங்கியுள்ளது. இதன் காரணமாக, காரைக்காலில் ஏராளமான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் பாதிப்புக்கு ஏற்ப நஷ்ட ஈடு வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்டு வலியுறுத்துவேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நராயணசாமி கூறினார்.