காவிரி பிரச்சினைக்காக பா.ம.க. போராட்டம்: கர்நாடக அரசு பஸ்கள் தமிழக எல்லை வரை இயக்கப்பட்டன
காவிரி பிரச்சினைக்காக பா.ம.க. சார்பில் நேற்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் கர்நாடக அரசு பஸ்கள் தமிழக எல்லை வரை இயக்கப்பட்டன. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
மசினகுடி,
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்பினர் பஸ் மறியல், ரெயில் மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். சென்னையில் நேற்று முன்தினம் நடந்த ஐ.பி.எல்.கிரிக்கெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் நேற்று தமிழகத்தில் பா.ம.க, சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஆனால் நீலகிரி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு யாரும் ஆதரவு அளிக்கப்படவில்லை.
பா.ம.க. போராட்டத்தால் எந்த வித அசம்பாவிதமும் நடைபெறாது என்பதால் ஊட்டியில் இருந்து கர்நாடகாவிற்கும், கர்நாடகவிலிருந்து ஊட்டிக்கும் இரு மாநில அரசு பஸ்கள் வழக்கம் போல இயக்கபட்டன. காலையில் பஸ்கள் இயக்கபட்ட நிலையில் காலை 11 மணி அளவில் கர்நாடக அரசு பஸ்கள் அனைத்தும் திடீரென நிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து கர்நாடக அரசு பஸ்கள் தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள கக்கநல்லா சோதனை சாவடி வரை இயக்கபட்டன.
இதனால் மைசூரு, பெங்களுரு உள்ளிட்ட கர்நாடகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து கர்நாடக அரசு பஸ்களில் வந்த பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கர்நாடக எல்லையில் இறக்கிவிடப்பட்டனர். மூட்டை முடிச்சுகளுடன் கர்நாடக எல்லையில் இருந்து தமிழக எல்லைக்கு பயணிகள் நடந்து வந்தனர்.
பின்னர் அங்கிருந்து தனியார் வாகனங்கள் மற்றும் தமிழக பஸ்களில் சொந்த இடங்களுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டது. கர்நாடக அரசு பஸ்களில் இருந்து வந்த பயணிகள் தமிழக அரசு பஸ்களில் இடம் பிடிக்க முண்டியடிக்கும் நிலைமை ஏற்பட்டது. ஆனால் தமிழக அரசு பஸ்கள் வழக்கம் போல கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்பட்டன. இதனால் நேற்று காலை 11 மணி முதல் இரவு வரை கர்நாடக அரசு பஸ்கள் நீலகிரி மாவட்டத்துக்கு இயக்கப்படவில்லை. கர்நாடக அரசு பஸ்கள் மாநில எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டதால் நேற்று பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.