காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஊட்டியில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்ட பா.ம.க. சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-04-11 23:00 GMT
ஊட்டி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பா.ம.க. சார்பில் தமிழகம் முழுவதும் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நீலகிரி மாவட்ட பா.ம.க. சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில துணை அமைப்பு செயலாளர் ஜான் லியோ, தலைவர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழக மக்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் வலியுறுத்தப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் சிலர் கருப்பு கொடிகளை ஏந்தியபடி பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் துரைராஜ், ஊட்டி நகர செயலாளர் சதீஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்