மண்டபம் அருகே கார்களில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது

மண்டபம் அருகே 3 கார்களில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2018-04-11 22:00 GMT
பனைக்குளம்,

மண்டபம் அருகே வேதாளை கிராமத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்பட உள்ளதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த கிராமத்தில் இருந்து வெளியே வந்த 3 கார்களை மடக்கி சோதனை நடத்தினர். சோதனையில் கார்களில் 140 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் மூடைகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததும், அதனை இலங்கைக்கு கடத்த கொண்டு செல்வதும் தெரியவந்தது.

இதைதொடர்ந்து போலீசார் காரில் இருந்த ராமேசுவரத்தை சேர்ந்த விஸ்வநாதன்(வயது 47), கோபுரத்தான்(27), ஜெகதாபட்டினம் புதுக்கோட்டையை சேர்ந்த கலந்தர்கனி(28), மதுரையை சேர்ந்த சேகர்(58) ஆகிய 4 பேரை பிடித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள கஞ்சா, அவர்கள் வந்த 3 கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்