சிவகங்கையில் ரெயில் மறியலுக்கு முயன்ற பா.ம.க.வினர் கைது
சிவகங்கை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆதிமூலம், மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் பா.ம.க.வினர் சிவகங்கை ரெயில் நிலையத்திற்குள் புகுந்து ரெயில் மறியலுக்கு முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேசுவரன், டவுன் இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் ரெயில் மறியலுக்கு முயன்ற பா.ம.க.வினர் 20 பேரை போலீசார் கைதுசெய்தனர்.