ராஜபாளையத்தில் சூறைக்காற்றுடன் மழை; மின்கம்பங்கள் சாய்ந்தன
ராஜபாளையத்தில் இடி மின்னலுடன் பெய்த மழை 1 மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் 2-வது நாளாக இடி- மின்னல், சூறைக்காற்றுடன் 2 மணி நேரம் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மகப்பேறு மருத்துவமனை பின்புறம், காந்தி சிலை ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அம்பலகுடிபஜார் பகுதியில் குளம் போல தண்ணீர் தேங்கியது. பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கி கடைகளுக்குள் புகுந்தது. மேலும் காற்றில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகளின் மேல் விழுந்தன. இதனால் மகளிர் போலீஸ் நிலையம் அருகிலும் மற்றும் சில இடங்களிலும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் நகரில் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின. மேலும் பழைய பஸ் நிலையத்தில் நகராட்சி வணிக வளாகத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
இதேபோல சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று மாலை திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இடி மின்னலுடன் பெய்த மழை 1 மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள பெரிய கண்மாய்க்கு தண்ணீர் வந்தது. வறண்டு கிடந்த பெரிய கண்மாய்க்கு தண்ணீர் வந்ததை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஆர்வமுடன் சென்று பார்த்தனர்.