வானூர் வாலிபர் கொலை வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் 2 பேர் சரண்
வானூரில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் 2 பேர் சரண் அடைந்தனர்.;
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா மொரட்டாண்டி பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் சந்தோஷ்குமார் (வயது 27). இவர் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 8-ந் தேதி இவர் தனது நண்பர்கள் சிலருடன் புளிச்சப்பள்ளம் பகுதியில் உள்ள சவுக்கு தோப்பிற்கு சென்றார். அங்கு அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சந்தோஷ்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ் குமாரை கொலை செய்த நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தங்களை தேடுவதை அறிந்த புதுச்சேரி முத்தையால்பேட்டையை சேர்ந்த சகாயராஜ் மகன் அருள்ஜெனிபர் (24), லாஸ்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வினோத் (24) ஆகியோர் நேற்று காலை விழுப்புரம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து நீதிபதி மும்தாஜ் உத்தரவின்பேரில், அவர்கள் இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.