சிவகாசி ராமுத்தேவன்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி சாவு
சிவகாசி அருகே ராமுத்தேவன்பட்டியில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி உயிரிழந்தார்.
தாயில்பட்டி,
சிவகாசி அருகேயுள்ள ராமுத்தேவன்பட்டியில் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 6-ந் தேதி வேனில் பட்டாசுகளை ஏற்றியபோது நிகழ்ந்த வெடிவிபத்தில் 2 தொழிலாளர்கள் அங்கேயே உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தார்கள். மேலும் இருளப்பன்நகரை சேர்ந்த பழனிசாமி (வயது40), குள்ளாய்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் (34) ஆகிய 2 தொழிலாளர்கள் தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பழனிசாமி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார். இதனால் ராமுத்தேவன்பட்டி பட்டாசு ஆலை தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. பழனிசாமி இந்த ஆலையில் 6 மாதங்களுக்கு முன்புதான் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவரது மனைவி ராஜேஸ்வரியும் அங்குதான் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் மகளும் 3 வயதில் மகனும் உள்ளனர்.
இந்த விபத்து நடந்த தினத்தன்றே அதேபகுதியில் எதிர்கோட்டை காக்கிவாடன்பட்டியில் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அதே இடத்தில் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இருவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.