காவிரி மேலாண்மை வாரியம் கோரி ரெயில் மறியலுக்கு முயன்ற பா.ம.க.வினர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்து பா.ம.க. சார்பில் நேற்று கடையடைப்பு மற்றும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மதுரை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர், விவசாயிகள் தினமும் போராட்டம், மறியல் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் பா.ம.க. சார்பில் நேற்று கடையடைப்பு மற்றும் ரெயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி மதுரையில் பா.ம.க. சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் செல்வம் தலைமையில் பா.ம.க.வினர் பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை பகுதியில் கூடினார்கள்.
அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்து கோஷம் போட்டு கொண்டே ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவர்களை ரெயில் நிலையத்திற்கு உள்ளே விட மறுத்தனர். பின்னர் மறியலுக்கு முயன்ற பா.ம.க.வினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.