போலீஸ் நிலையத்தை நரிக்குறவர்கள் முற்றுகை: கந்து வட்டி கேட்டு மிரட்டிய வாலிபர் கைது
கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தை நரிக்குறவர்கள் முற்றுகையிட்ட சம்பவத்தை தொடர்ந்து கந்து வட்டி கேட்டு மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி,
நெல்லை மாவட்டம் புதுப்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் தர்மர் (வயது 37). இவர் கன்னியாகுமரியில் நண்பர்களுடன் தங்கி இருந்து ஊசி, பாசி வியாபாரம் செய்து வருகிறார். தொழில் தேவைக்காக இவர் தோவாளை பகுதியை சேர்ந்த மதுசூதனன் (32) என்பவரிடம் இருந்து வட்டிக்கு பணம் வாங்கியிருந்தார்.
இந்த பணத்தை தினமும் வட்டியுடன் கட்டி வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில், மதுசூனனும், அவரது நண்பர் கொட்டாரத்தை சேர்ந்த குமார் என்பவரும் கூடுதல் பணம் தரவேண்டும் என்றும், கந்து வட்டி தரக்கோரியும் மிரட்டினர். மேலும், நரிக்குறவர் தர்மரை தகாத வார்த்தைகள் பேசி தாக்கவும் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள நரிகுறவர்கள் அனைவரும் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் கொடுத்தனர். கந்துவட்டி கேட்டு தர்மரை அடித்த வாலிபரை கைது செய்யவேண்டும் எனக்கோரி அவர்கள் கோஷமிட்டனர்.
கைது
இதையடுத்து கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்–இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன் கிரேசியஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர், புகார் கூறப்பட்ட மதுசூதனன், அவரது நண்பர் குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதுசூதனன் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.