சாமிதோப்பில் விமான நிலையம் அமைக்க மத்திய விமானத்துறை அதிகாரிகள் ஆய்வு
சாமிதோப்பில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மத்திய விமானத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.;
தென்தாமரைகுளம்,
குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க சாமிதோப்பில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக மத்திய அரசுக்கு சொந்தமான உப்பளப்பகுதியில் 850 ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டு வரைபடம் தயார் செய்யப்பட்டு டெல்லியில் உள்ள மத்திய விமானத்துறை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
விமானத்துறை ஆணைய அதிகாரிகள் வரைபடத்தை ஆய்வு செய்து அதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். பின்னர், 2–ம் கட்ட பணியாக நேற்று மதியம் மத்திய விமானத்துறை துணை பொது மேலாளர்கள் சுதேஷ் சர்மா, குப்தா, அனுராஜ் மிஸ்ரா, உதவி துணை மேலாளர் புஸ்ரா ஆகியோர் சாமிதோப்பில் விமான நிலையம் அமைய இருக்கும் இடத்தை நேரடியாக வரை படத்தை வைத்து ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது, மத்திய விமானத்துறை ஆலோசனை குழு உறுப்பினர் விஜயகுமார் எம்.பி., உதவி செயற்பொறியாளர் கணேசன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சஜித், வருவாய்துறை அதிகாரி ஜானகி, வடக்குதாமரைகுளம் கிராம நிர்வாக அதிகாரி சிவராகுல் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர். பின்னர், காற்று வீசும் திசை, ஓடுதளம் அமைக்க ஏற்ற இடம் குறித்து ஆய்வு நடத்தினர்.
மேலும், பொருளாதார ரீதியாக இந்த விமான நிலையத்தின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதற்காக சுற்றுப்பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்கள், சுற்றுலா தலங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர், மத்திய விமானத்துறை ஆலோசனைக்குழு உறுப்பினர் விஜயகுமார் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:–
விமானத்துறையை சேர்ந்த 4 அதிகாரிகள் ஆய்வு பணிக்கு வந்துள்ளனர். இவர்கள் விமானதுறைக்கு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட பணிகள் தொடங்கும்.
இந்த விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரும்போது, ஆண்டுக்கு 1 கோடி சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். இந்த விமான நிலையத்தில் முதல் விமானமே கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு செல்வதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சந்தையடி பாலகிருஷ்ணன், வடக்கு தாமரைகுளம் கூட்டுறவு சங்க தலைவர் பார்த்த சாரதி, சாமிதோப்பு ஊர்தலைவர் மதிவாணன், அரசு வக்கீல் ஞானசேகர், கனகராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.