நாகர்கோவிலில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

நாகர்கோவிலில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை கலெக்டர் பிரசாந்த் வடநேரே, விஜயகுமார் எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Update: 2018-04-11 02:22 GMT
நாகர்கோவில்,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஓராண்டு நிறைவு அடைந்ததையடுத்து “அம்மா வழியில் நல்லாட்சி - அதற்கு ஓராண்டு சாதனையே சாட்சி“ என்று தமிழ்நாடு அரசின் சாதனைகள் குறித்து செய்தி- மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையத்தில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே மற்றும் விஜயகுமார் எம்.பி. ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.இந்த கண்காட்சியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்களுக்காக கால்நடைத்துறை மூலம் விவசாயிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள், விலையில்லா ஆடுகள், நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் ஏழை, எளியமக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

பின்னர் நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையத்தில் திரையிடப்பட்ட தமிழக அரசின் ஓராண்டு சாதனை செய்தி மலர் ‘அம்மா வழியில் நல்லாட்சி - அதற்கு ஓராண்டு சாதனையே சாட்சி‘ குறும்படத்தின் வீடியோ படக்காட்சியினையும் கலெக்டர் மற்றும் விஜயகுமார் எம்.பி. ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் ஓராண்டு சாதனை குறித்த ஒட்டு வில்லைகளையும் அரசு பஸ்களில் ஒட்டினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி- மக்கள் தொடர்பு அதிகாரி தேச கலையரசன், வருவாய் கோட்டாட்சியர் ஜானகி, உதவி மக்கள் தொடர்பு அதிகாரி (விளம்பரம்) செல்வலெட் சுஷ்மா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்