காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கீரனூரில் கிறிஸ்தவர்கள், விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நமணசமுத்திரம்,
தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அரசியல் கட்சியினர், மாணவர்கள், பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்கள், ரெயில் மறியல் உள்ளிட்டவற்றை தினமும் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நமணசமுத்திரம் அருகே லெணாவிலக்கில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து திடீரென கல்லூரி முன்பு அமர்ந்து கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திடக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். மாணவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது. மாணவர்கள் போராட்டத்தையொட்டி பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, புதுக்கோட்டையில் சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநல சங்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதற்கு சங்கத்தின் தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ஆரோக்கியசாமி, இப்ராகீம்பாபு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் டாக்டர்கள் சலீம், ஆறுமுகம், மகாத்மா காந்தி பேரவை நிறுவனர் தினகரன், மாணவ, மாணவிகள், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு தபால் அட்டையில் கையெழுத்து போட்டனர். இதைத்தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து தபால் அட்டைகளும் ஜனாதிபதி-பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கீரனூரில் திருச்சி மறை மாவட்ட கீரனூர் மறை வட்ட கிறிஸ்தவர்கள் மற்றும் விவசாயிகள் சங்கம் சார்பில் காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மறைமாவட்ட பொறுப்பாளர் ஜூலி தலைமை தாங்கினார். இதில் திருச்சி மறைமாவட்ட தலைவர் யூஜின், கீரனூர் பங்கு தந்தை எட்வர்டு ராஜா உள்பட 13 மறைமாவட்ட பாதியார்கள், கன்னியாஸ்திரிகள், கிராமமக்கள், தமிழ் மாநில காங்கிர கட்சி மாநில இணைச்செயலாளர் ஆனந்த்மாணிக்கம், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ரவி, செயலாளர் நடராஜ், நகரதலைவர் கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பபட்டன. பின்னர் நடந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.