காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து மயிலாடு துறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-04-11 02:18 GMT
மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் கார், வேன், ஆட்டோ, லோடு வேன் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் சங்கம், இருசக்கர மோட்டார் வாகனங்கள் பழுது நீக்குவோர் நலச்சங்கம் ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கார், வேன், ஆட்டோ, லோடு வேன் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் சங்க மாவட்ட தலைவர் அன்பு தலைமை தாங்கினார். வட்ட தலைவர் கண்ணன், வட்ட செயலாளர் சிவமணி, இருசக்கர மோட்டார் வாகனங்கள் பழுது நீக்குவோர் நல சங்கத்தின் மண்டல தலைவர் ராமு, நகர தலைவர் பகவதி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம்

ஆர்ப்பாட்டத்தின்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன், தமிழர் தேசிய முன்னணியின் மாவட்ட தலைவர் முரளிதரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வேலு.குபேந்திரன், வக்கீல் என்.எஸ்.அழகிரி, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்