வன்கொடுமை தடுப்பு சட்ட விவகாரம்: சேலத்தில் ஊர்வலம்-சாலை மறியல்
வன்கொடுமை தடுப்பு சட்ட விவகாரம் தொடர்பாக சேலத்தில் ஊர்வலம்-சாலை மறியல் நடைபெற்றது.;
சேலம்,
வன்கொடுமை தடுப்பு சட்ட விவகாரம் தொடர்பாக சேலத்தில் ஊர்வலம், சாலைமறியல் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, சி.ஐ.டியு., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை சார்பில் சேலம் திருவள்ளுவர் சிலையில் இருந்து பழைய பஸ்நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் வரை நேற்று ஊர்வலம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் குழந்தைவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் காஜாமொய்தீன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வன்கொடுமை தடை சட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், இது தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்தும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி கொண்டு ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் தபால் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் நின்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து 8 பெண்கள் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.