போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்; 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
துறையூரில் போலீசாரை கண்டித்து பொதுமக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டம் காரணமாக ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூர் பெரிய ஏரியில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த 2 மணி விளக்குகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டு போனது. இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து பொதுமக்கள் விசாரித்ததில் மணி விளக்குகளை திருடியதை ஒப்புக்கொண்டதாகவும், அதனை திரும்ப தந்து விடுவதாகவும் கூறினர்.
ஆனால் அவர்கள் கூறிய படி கோவில் மணி விளக்குகளை திருப்பி தராததால் பொதுமக்கள் துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க நேற்று முன்தினம் சென்றனர். ஆனால் போலீசார் கோவிலில் திருடியவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு புகார் அளிக்க சென்றவர்கள் மீது வழக்கு போடுவோம் என கூறினராம். இதனை கண்டித்து பொது மக்கள் துறையூர் சிலோன் ஆபீஸ் அருகில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிலர் தேசிய கொடிகளுடன் கலந்து கொண்டனர்.
இதனால் பெரம்பலூரில் இருந்து வரும் பஸ்களும், துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் பஸ்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்த முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன், துறையூர் சப்-இன்ஸ்பெக்டர் ஹாரூண் மற்றும் போலீசார் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் துறையூர்-பெரம்பலூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.